தேனியில் அகல ரெயில்பாதை பணிகள் தீவிரம்


தேனியில் அகல ரெயில்பாதை பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 23 April 2021 8:39 PM IST (Updated: 23 April 2021 8:43 PM IST)
t-max-icont-min-icon

தேனியில் அகல ரெயில்பாதை பணிகள் தீவிரம் அடைந்துள்ளது.

தேனி:
மதுரை-போடி இடையே இயக்கப்பட்டு வந்த மீட்டர்கேஜ் ரெயில் கடந்த 2010-ம் ஆண்டு இறுதியில் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு அகல ரெயில்பாதை திட்டப் பணிகள் தொடங்கியது. சில ஆண்டுகளாக இந்த பணிகள் முடங்கிக் கிடந்தன. பின்னர், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்த ரெயில் பாதையில் மதுரையில் இருந்து ஆண்டிப்பட்டி வரை ரெயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து விரைவில் அகல ரெயில் பாதையில் மதுரையில் இருந்து தேனி வரை ரெயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. குறிப்பாக ரெயில்வே தண்டவாளம் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஜல்லிக்கற்கள் பரப்பும் பணி, ரெயில்வே பாதை சந்திப்பு சாலைகளில் ரெயில்வே கேட் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ரெயில் தண்டவாளங்களில் வளைவுகளை சரிசெய்வது, தண்டவாளங்களை ஒழுங்குபடுத்தும் பணிகள் சில நாட்களாக நடந்து வருகின்றன. மதுரையில் இருந்து இந்த பணிக்கான என்ஜின் நேற்று வந்தது. அதன் மூலம் தேனி நகரில் அகல ரெயில் பாதையில் தண்டவாளங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டு, இணைப்பு பகுதிகள் பரிசோதிக்கப்பட்டன.

Next Story