நகராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு
நகராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
தேனி:
தேனி அல்லிநகரம் நகராட்சி மற்றும் சின்னமனூர் நகராட்சி பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள், கட்டுப்பாட்டு பகுதிகளில் நோய் தடுப்பு பணிகள், விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த நகராட்சி பகுதிகளில் கொரோனா பாதிப்புக்குள்ளான நபர்கள் எண்ணிக்கை, பரிசோதனை விவரங்கள், தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் போன்ற விவரங்களை கேட்டறிந்தார். ஆய்வைத் தொடர்ந்து நகராட்சி அலுவலகங்களில் நோய் தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும், முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், நோய் தடுப்பு பணிகளில் பிற துறையினருடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின் போது தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையாளர் நாகராஜன், சுகாதார அலுவலர் அறிவுச்செல்வம், சின்னமனூர் நகராட்சி ஆணையாளர் சியாமளா மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story