94 பேருக்கு கொரோனா


94 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 23 April 2021 8:58 PM IST (Updated: 23 April 2021 8:58 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தில் 94 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது. 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டத்தில் 94 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது. 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பாதிப்பு
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 94 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 7 ஆயிரத்து 370 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இதுவரை 6 ஆயிரத்து 720 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 510 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். 140 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். 
3 பேர் பலி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியை சேர்ந்த 57 வயது நபர் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பலியானார். 
இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 67 வயது முதியவர் சென்னை தனியார் ஆஸ்பத்திரியிலும் மற்றும் 56 வயது ஆண், 84 வயதுமுதியவர் மதுரை தனியார் ஆஸ்பத்திரியிலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளதாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story