விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை வாங்கிய கடனை செலுத்த முடியாததால் விபரீத முடிவு
வாங்கிய கடனை செலுத்த முடியாததால் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.
விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டி அடுத்த பனையபுரத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி (வயது 42). தொழிலாளி. இவர் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளார்.இந்த கடனை இவரால் திருப்பி செலுத்த முடியாமல் போனதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த கலியமூர்த்தி விஷத்தை குடித்தார்.
இதையடுத்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் இரவு அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரது மனைவி கங்கா விக்கிரவாண்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரணிநாதன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Related Tags :
Next Story