விழுப்புரம் அருகே வங்கி ஊழியர் வீட்டில் பணம் திருட்டு


விழுப்புரம் அருகே வங்கி ஊழியர் வீட்டில் பணம் திருட்டு
x
தினத்தந்தி 23 April 2021 9:56 PM IST (Updated: 23 April 2021 9:56 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே வங்கி ஊழியர் வீட்டில் மா்ம மனிதா்கள் பணத்தை திருடி சென்றுவிட்டனா்.

விழுப்புரம், 

விழுப்புரம் அருகே உள்ள டி.மேட்டுப்பாளையத்தை அடுத்த கொய்யாத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் குப்பன் மகன் முத்துகிருஷ்ணன் (வயது 27). இவர் புதுச்சேரியில் உள்ள ஒரு வங்கியில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.

 இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இவரும், இவரது தாய் குப்புவும் வீட்டில் புழுக்கமாக இருப்பதால் மாடிக்கு சென்று படுத்து தூங்கினர். பின்னர் நேற்று காலையில் எழுந்து வந்து பார்த்தபோது வீட்டின் மரக்கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டனர். 

உடனே வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த ரூ.8 ஆயிரம் திருட்டு போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.

மேலும் முத்துகிருஷ்ணன் வீட்டில் நகை, பணம் அதிகம் இருக்கும், அதை அப்படியே கொள்ளையடித்து விடலாம் என்று எண்ணிய மர்ம நபர்கள், போலீசிடம் சிக்காமல் இருக்க கொள்ளையடிப்பதற்கு முன்பாக வீட்டின் முன்புற பகுதியில் மிளகாய் தூளை தூவி விட்டு அதன் பிறகு பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். 

ஆனால் பீரோவில் நகை எதுவும் இல்லாததால் பெருத்த ஏமாற்றத்துடன் கையில் கிடைத்த வெறும் ரூ.8 ஆயிரத்தை மட்டும் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story