ரிஷிவந்தியம் பகுதியில் அறிவிக்கப்படாத மின்தடையால் குடிநீர் விவசாயம் பாதிப்பு


ரிஷிவந்தியம் பகுதியில்  அறிவிக்கப்படாத மின்தடையால் குடிநீர் விவசாயம் பாதிப்பு
x
தினத்தந்தி 23 April 2021 9:56 PM IST (Updated: 23 April 2021 9:56 PM IST)
t-max-icont-min-icon

ரிஷிவந்தியம் பகுதியில் அறிவிக்கப்படாத மின்தடையால் குடிநீர் விவசாயம் பாதிப்பு

ரிஷிவந்தியம்

தியாகதுருகம் துணைமின் நிலையத்தில் இருந்து ரிஷிவந்தியம், முடியம், வெங்கலம், பிரிவிடையாம்பட்டு, பாசார், முனிவாழை உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோட்டை மின் தடத்தில் இருந்து சவேரியார்புரம், ஸ்ரீதேவி, பூண்டி, அதையூர், கொளத்தூர், பிள்ளையார்பாளையம், கல் சிறுநாவலூர் பகுதியில் உள்ள 17 மின்மாற்றிகள் ரிஷிவந்தியம் மின் தடத்தில் இணைக்கப்பட்டது. 
இதனால் இப்பகுதியில் குறைந்த மின் அழுத்தம் ஏற்படுவதால் மின் மோட்டார்கள் இயங்கவில்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. காலிகுடங்களுடன் கிணறு, குளம், ஏரி என்று பொதுமக்கள் தண்ணீரை தேடி அலைய வேண்டிய நிலை உள்ளது. அதேபோல் மும்முனை இணைப்புள்ள விவசாய மின் மோட்டார்களையும் இயக்கமுடியாததால் விளை நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். சுட்டெரித்து வரும் வெயிலில் பயிர்கள் கருகி சேதம் அடையும் அபாய நிலை உள்ளது.

எனவே ரிஷிவந்தியம் மற்றும் கோட்டை மின் தடத்தில் ஏற்பட்டுள்ள குறைந்த மின் அழுத்த பிரச்சினையை சரிசெய்ய ரிஷிவந்தியம் மற்றும் கோட்டை மின்வாரிய பொறியாளர்கள் உடனடி நடவடிக்கை எடுத்து இப்பகுதி கிராமங்களுக்கு சீரான மின் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Next Story