சின்னசேலம் அருகே மாமியார், மருமகளை தாக்கியவர் கைது
சின்னசேலம் அருகே மாமியார், மருமகளை தாக்கியவர் கைது
சின்னசேலம்
சின்னசேலம் அருகே எலவடி மேற்கு காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் சீனுவாசன் விவசாயி. இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மரவாநத்தம் கிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி என்பவருக்கு சொந்தமான நிலத்தை வாங்க கிரயம் பேசி மூங்கில்பாடி காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த இடைத்தரகர் குமாரசாமி(வயது 60) முன்னிலையில் ஒப்பந்தம் செய்ததாகவும், பின்னர் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் தனக்கு கமிஷன் கிடைக்காத ஆத்திரத்தில் இருந்த குமாரசாமி சம்பவத்தன்று சீனுவாசன் வீட்டுக்கு சென்று அவரது தாய் ஜெயாவை திட்டி தாக்கியதோடு தடுக்க வந்த மனைவி தமிழரசியையும் திட்டி தாக்கி மிரட்டியதாக தெரிகிறது. இதுபற்றி ஜெயா கொடுத்த புகாரின் பேரில் குமாரசாமி இவரது ஆதரவாளர்கள் முருகேசன், சத்தியபகவான் ஆகியோர் மீது சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குமாரசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story