தர்மபுரி மாவட்டத்தில் 121 பேருக்கு கொரோனா தொற்று


தர்மபுரி மாவட்டத்தில் 121 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 23 April 2021 10:36 PM IST (Updated: 23 April 2021 10:36 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் 121 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று புதிதாக 121 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இந்த தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டவர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது.  தர்மபுரி மாவட்டத்தில் ஏற்கனவே 856 பேர் கொரோனாபாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 84 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்கள். சிகிச்சை பெற்றவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 121 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக தர்மபுரி மாவட்டத்தில் 892 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா தொற்று காரணமாக தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 62 பேர் உயிரிழந்து உள்ளனர்.

Next Story