தூத்துக்குடி அருகே எரிந்த நிலையில் பெண் உடல் மீட்பு


தூத்துக்குடி அருகே எரிந்த நிலையில் பெண் உடல் மீட்பு
x
தினத்தந்தி 23 April 2021 10:37 PM IST (Updated: 23 April 2021 10:45 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே எரிந்த நிலையில் பெண் உடலை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி அருகே உள்ள துரைச்சாமிபுரம் காட்டுப் பகுதியில் எரிந்த நிலையில் சுமார் 25 முதல் 35 வயது உடைய பெண் உடல் எரிந்த நிலையில் கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர் இறந்த பெண் யார் எந்த ஊரை சேர்ந்தவர் அவர் எதற்காக எரித்துக் கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்தவர் இடது கால் சுண்டு விரல் மற்றும் அதன் அருகில் உள்ள விரல் முன்னும் பின்னுமாக உள்ளது. காலில் கொலுசு, கால் விரலில் மெட்டி அணிந்து உள்ளார். கழுத்தில் தாலி, இரட்டைச் சடை போடப்பட்டு உள்ளது, மஞ்சள் நிற சேலை அணிந்து உள்ளார். கருப்பு நிற முக கவசம், சில்வர் நிற சிறிய சாவியும் உள்ளது. 

இறந்தவர் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் விளாத்திக்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் 94434 46009, தருவைக்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் 94981 94400, தருவைக்குளம் தருவைகுளம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சரவணன் 94981 07200 மற்றும் தருவைக்குளம் போலீஸ் நிலைய தொலைபேசி எண் 0461 - 2277270 ஆகிய எண்ணிற்கு தகவல் தெரிவிக்குமாறு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Next Story