காய்ந்த தென்னை மரங்களை அகற்றிவிட்டு மாற்று பயிர் சாகுபடிக்கு தயாராகும் விவசாயிகள்
சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் காய்ந்த தென்னை மரங்களை அகற்றிவிட்டு மாற்று பயிர் சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வருகிறார்கள். எனவே குறைந்த விலையில் கடன் வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் காய்ந்த தென்னை மரங்களை அகற்றிவிட்டு மாற்று பயிர் சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வருகிறார்கள். எனவே குறைந்த விலையில் கடன் வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்னை மரங்கள் காய்ந்தன
சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் தென்னை விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இங்கு 15 லட்சத்து 60 ஆயிரம் தென்னை மரங்கள் உள்ளன. இந்த மரங்களில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய், இளநீர் பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
மீதமுள்ள தேங்காய்கள் உலர்களத்தில் உடைத்து காயப்போட்டு கொப்பரைகளாக மாற்றப்படுகிறது. இந்த நிலையில் இந்த பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை பெய்யவில்லை.
இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால், ஏராளமான தென்னை மரங்கள் காய்ந்தன. எனவே அந்த மரங்களை வெட்டி அகற்றிவிட்டு வேறு பயிர்கள் சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வருகிறார்கள்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-
மாற்று பயிர் சாகுபடி
தண்ணீர் இல்லாததால் ஏராளமான தென்னை மரங்கள் காய்ந்து வருகின்றன. எனவே அவற்றை வெட்டி அகற்றிவிட்டு மண்ணின் தரத்துக்கு ஏற்ப வெண்டைக்காய், தக்காளி, கத்தரி உள்பட காய்கறி பயிர்களை சாகுபடி செய்ய முடிவு செய்து உள்ளோம்.
எனவே அதற்காக வங்கிகள் மூலம் குறைந்த வட்டிக்கு கடன் வழங்க மாவட்ட நிர்வாகம் வழிவகை செய்ய வேண்டும். அதுபோன்று காய்ந்துபோன தென்னை மரங்கள் குறித்து கணக்கெடுத்து, அவற்றுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
விவசாயிகளுக்கு ஆலோசனை
அதுபோன்று தண்ணீர், மண் தரத்துக்கு ஏற்ப எந்த பகுதியில் என்னென்ன காய்கறி பயிர்களை சாகுபடி செய்யலாம் என்பது குறித்தும் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story