கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு
பள்ளிகளுக்கு இடையேநடந்த கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பொள்ளாச்சி
பள்ளிகளுக்கு இடையேநடந்த கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கட்டுரை போட்டி
கோவை ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் சார்பில் பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வட்டார அளவிலான பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை போட்டிகள் நடைபெற்றது.
9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை கொரோனா கால கதாநாயகர்கள் என்ற தலைப்பில் கட்டுரை போட்டி நடத்தப்பட்டது.
இந்த போட்டியில் பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் விக்னேஷ்வரன் முதலிடமும், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நிஷாந்தி 2-வது இடமும், மாக்கினாம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் ராமன் 3-வது இடமும் பிடித்தனர்.
மாணவ-மாணவிகளுக்கு பரிசு
6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு அதே தலைப்பில் கட்டுரை போட்டி நடைபெற்றது.
இதில் வி.எஸ்.ஆர்.ஏ. நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவன் பிரசாந்த் முதலிடமும், வடுகபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவி கன்னீஸ்வரி 2-வது இடமும், ஏ.பி.டி. ரோடு நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவி நவுரின் பாத்திமா 3-வது இடமும் பிடித்தனர்.
போட்டியில் முதல் பரிசு பெற்றவர்களுக்கு ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள கையடக்க கணினி (டேப்லெட்), 2-ம் பரிசாக ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட் போன், 3-ம் பரிசாக ரூ.1000 மதிப்புள்ள கால்குலேட்டர் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story