வால்பாறையில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை


வால்பாறையில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை
x
தினத்தந்தி 23 April 2021 11:42 PM IST (Updated: 23 April 2021 11:42 PM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.

வால்பாறை

வால்பாறை அரசு ஆஸ்பத்திரி, முடீஸ், சோலையார் நகர் ஆகிய பகுதியில் உள்ள சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 

தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், தடுப்பூசி போட பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால் வால்பாறை பகுதியில் தற்போது கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட தொடங்கி விட்டது. 

3 நாட்களுக்கு ஒருமுறைதான் தடுப்பூசி வினியோகம் செய்யப்படுவதால், இங்கு தடுப்பூசி போட வருபவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகிறார்கள்.  அதுபோன்று தடுப்பூசி பற்றாக்குறையால் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

 அதன்படி இதுவரை 500 பேர் தடுப்பூசி போட முன்பதிவு செய்து உள்ளனர். இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, வால்பாறையில் இதுவரை 2,800 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. 

பதிவு செய்தவர்களுக்கு தடுப்பூசி வந்ததும் உடனடியாக போடப்படும் என்றனர். 


Next Story