ராசிபுரம் ரெயில்வே மேம்பாலத்தில் மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; 4 வாலிபர்கள் படுகாயம்
ராசிபுரம் ரெயில்வே மேம்பாலத்தில் மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; 4 வாலிபர்கள் படுகாயம்
ராசிபுரம்:
ராசிபுரம் ரெயில்வே மேம்பாலத்தில் மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 4 வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர்.
பீகார் வாலிபர்கள்
ராசிபுரத்தில் பீகாரை சேர்ந்த அமிலேஷ் (வயது 26), ராஜேஷ் (24) என்ற 2 வாலிபர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் நேற்று மாலை சேலத்தில் இருந்து ராசிபுரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்தனர். அதேபோல் மல்லூர் சுபாஷ் நகரை சேர்ந்த மணிகண்டன் (24), பூபாலன் (28) ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் ராசிபுரத்தில் இருந்து மல்லூர் நோக்கி சென்றனர்.
ராசிபுரம் டவுன் சேலம் சாலையில் உள்ள ெரயில்வே மேம்பாலத்தில் சென்றபோது 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 2 மோட்டார்சைக்கிள்களில் வந்த 4 வாலிபர்களும் படுகாயம் அடைந்தனர். அப்போது அந்த பகுதியில் மழை பெய்து கொண்டிருந்ததால் படுகாயமடைந்த 4 பேரும் நனைந்து கொண்டு வலியால் அலறி துடித்தனர்
விசாரணை
இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தும் கால தாமதமாக ஒரு ஆம்புலன்ஸ் வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த ஆம்புலன்சில் படுகாயத்துடன் கிடந்த மல்லூரை சேர்ந்த 2 வாலிபர்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பீகாரை சேர்ந்த 2 வாலிபர்கள் கால்முறிந்து வலிதாங்க முடியாமல் கதறினர்.
பிறகு வந்த மற்றொரு ஆம்புலன்ஸ் அவர்கள் 2 பேரையும் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து ராசிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நேற்று அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
===
Related Tags :
Next Story