திருச்சி தார் விற்பனையாளர் கொலை வழக்கில் குளித்தலை நீதிமன்றத்தில் வாலிபர் சரண்
திருச்சி தார் விற்பனையாளர் கொலை வழக்கில் குளித்தலை நீதிமன்றத்தில் வாலிபர் சரண் அடைந்தார்.
குளித்தலை
தார் விற்பனையாளர் கொலை
திருச்சி மாவட்டம், நெடுங்கூர் அருகே உள்ள சொக்கலிங்கபுரம் பகுதியில் வசித்து வந்தவர் பாண்டியன் (வயது 45). இவர் சாலை அமைக்க பயன்படுத்தப்படும் தாரை மொத்தமாக வாங்கி ஒப்பந்ததாரர்களுக்கு விற்பணை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இவர் கடந்த 16-ந்தேதி அவரது வீட்டின் பின்புறம் உள்ள குளியல் அறையில் மர்ம உறுப்பு அறுக்கப்பட்டும், கழுத்தில் குத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து திருச்சி சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிந்து, பொன்னம்பலம், சங்கீதா மற்றும் புஸ்வராஜ் ஆகிய 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
வாலிபர் சரண்
இந்தநிலையில் இக்கொலை வழக்கு தொடர்பாக போலீசாரால் தேடப்பட்டு வந்ததாக கூறப்படும் புஸ்வராஜின் தம்பி தர்மேஷ் (21) என்பவர் நேற்று காலை கரூர் மாவட்டம் குளித்தலை குற்றவியல் நீதிமன்றம் எண்.1-ல் சரணடைந்தார். இதுகுறித்து விசாரித்த நீதிபதி தினேஷ்குமார் உத்தரவின் பேரில் தர்மேஷ் கரூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story