ஆண்டாள் கோவிலில் சிறப்பு வழிபாடு


ஆண்டாள் கோவிலில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 24 April 2021 12:46 AM IST (Updated: 24 April 2021 12:46 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பூரம் நட்சத்திரத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர், 
ஒவ்வொரு மாதமும் பூர நட்சத்திரத்தன்று ஆண்டாள் கோவில் வளாகத்தின் அருகே உள்ள தான் பிறந்த இடமான நந்தவனத்தில் ஆண்டாள் காட்சியளிப்பார். அதேபோல் நேற்று சித்திரை மாத பூர நட்சத்திரம் என்பதால் தான் பிறந்த இடமான நந்தவனத்தில் காட்சி அளித்தார். எப்போதும் நந்தவனத்தில் தனியாக காட்சியளிக்கும் ஆண்டாள் தற்போது வசந்த உற்சவம் நடைபெற்று வருவதால் நந்தவனத்தில் ரெங்கமன்னார் உடன் சேர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் ஆகியோர் செய்திருந்தனர். வடபத்ரசாயி தலைமையில் ஆண்டாள் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு இலவசமாக முக கவசம் வழங்கப்பட்டது. 

Next Story