செட்டிநாடு கைத்தறி சேலைகள் தேக்கம்
கொரோனாவால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால் செட்டிநாடு கைத்தறி சேலைகள் விற்பனையாகாமல் தேங்கி கிடக்கின்றன.
காரைக்குடி,
கொரோனாவால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால் செட்டிநாடு கைத்தறி சேலைகள் விற்பனையாகாமல் தேங்கி கிடக்கின்றன.
புவிசார் குறியீடு
காரைக்குடி பகுதியில் மட்டும் சுமார் 500-க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் கைத்தறி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொழிலாளர்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் செட்டிநாடு சேலைகளுக்கு புவிசார் குறியீடும் கிடைத்துள்ளது.
சுற்றுலா பயணிகளுக்கு தடை
தற்போது கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால் சுற்றுலா தலங்களை மூட அரசு உத்தரவிட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் யாரும் வருவதில்லை.
சுற்றுலா பயணிகள் வராததால் செட்டிநாடு பகுதியில் கைத்தறி சேலைகள் விற்பனையாகாமல் தேங்கி கிடக்கின்றன. இதனால் கைத்தறி நெசவாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து கானாடுகாத்தான் பகுதியில் தறி கூடம் நடத்தி வரும் வெங்கட்ராமன் கூறியதாவது-
ஏற்கனவே கடந்தாண்டு நிலவிய கொரோனா தொற்று காரணமாக எங்களது தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் பின்னர் அந்த பாதிப்பில் இருந்து தற்போது தான் மீண்டு வந்துள்ளோம். இந்நிலையில் தற்போது கொரோனா 2-வது அலை காரணமாக இரவு ஊரடங்கு மற்றும் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதால் கைத்தறி சேலைகள் விற்பனையாகாமல் தேங்கி கிடக்கின்றன. இரவு நேர ஊரடங்கால் சரக்கு வாகனங்களில் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களுக்கு செட்டிநாடு கைத்தறி சேலைகள் அனுப்புவதில் பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story