மதுரை விழுப்புரம் சிறப்பு ரெயில் ஞாயிற்றுக்கிழமைகளில் ரத்து
மதுரை விழுப்புரம் சிறப்பு ரெயில் ஞாயிற்றுக்கிழமைகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மதுரை, ஏப்.
கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவிவருகிறது. அதனை கட்டுப்படுத்த அந்தந்த மாநில அரசுகள் வசதிக்கேற்ப ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன. தமிழகத்தில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமலில் உள்ளது. இதற்கிடையே, கொரோனா அச்சம் காரணமாக பொதுமக்களும் தேவையற்ற பயணங்களை தவிர்த்து வருகின்றனர். இதனால், வெளியூர் செல்லும் பஸ்கள் மற்றும் ரெயில்களில் பயணிகளின் கூட்டம் குறைந்துள்ளது. இதற்கிடையே, மதுரை கோட்ட ரெயில்வேயில் இயக்கப்படும் மதுரை-விழுப்புரம் சிறப்பு ரெயில் (வ.எண்.06867/06868) மற்றும் காரைக்குடி-திருச்சி சிறப்பு ரெயில் (வ.எண்.06125/06126) ஆகிய ரெயில்கள் நாளை மற்றும் வருகிற 2-ந் தேதி ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் இரு மார்க்கங்களிலும் இயக்கப்படாது. மேலும், மதுரை கோட்டத்துக்கு உள்பட்ட கேரள மாநிலம் புனலூர்-குருவாயூர் இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயிலும் இரு மார்க்கங்களிலும் மேற்கண்ட நாட்களில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story