10 பேர் கொரோனாவால் பாதிப்பு


10 பேர் கொரோனாவால் பாதிப்பு
x
தினத்தந்தி 24 April 2021 2:59 AM IST (Updated: 24 April 2021 2:59 AM IST)
t-max-icont-min-icon

புதிதாக 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெரம்பலூர்:

80 பேருக்கு சிகிச்சை
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 10 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 2,449 ஆக உயர்ந்துள்ளது. இதில் 23 பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர். 2,346 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 80 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 1 லட்சத்து 2 ஆயிரத்து 526 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில், 2 ஆயிரத்து 449 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஆயிரத்து 190 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கான பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

Next Story