தனியார் நிறுவன தொழிலாளர்கள் 11 பேருக்கு கொரோனா
தனியார் நிறுவன தொழிலாளர்கள் 11 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
மீன்சுருட்டி:
விக்கிரவாண்டி முதல் தஞ்சாவூர் வரை தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அதன்படி அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே அணைக்கரை வடவார்தலைப்பில் சாலை அகலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணிகளுக்காக, பட்டேல் நிறுவனத்தில் 80 தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 11 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அதில் 4 பேர் அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மற்ற 7 பேர் வெளியில் சென்று விட்டதால் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் திரும்பி வரவில்லை. இதையடுத்து அவர்களை சுகாதாரத்துறையினர் தேடி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க சுகாதாரத்துறை மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அங்கிருந்து ஊழியர்கள் வெளியில் செல்லாமல் இருக்க, 24 மணி நேரமும் போலீசார் சுழற்சி முறையில் நியமிக்கப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர்.
Related Tags :
Next Story