தென்காசியில் கொரோனாவுக்கு 27 வயது பெண் உள்பட 2 பேர் சாவு
தென்காசியில் கொரோனாவுக்கு 27 வயது பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று 27 வயது பெண் உள்பட 2 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். தென்காசியை சேர்ந்த 27 வயது பெண் ஒருவர் கடந்த 20-ந்தேதி கொரோனா பாதிப்புடன் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இருந்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதேபோல் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 69 வயது முதியவர் கடந்த 15-ந் தேதி கொரோனா பாதிப்பால் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவரும் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 169 ஆக உயர்ந்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் நேற்று மேலும் 173 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக தென்காசி மற்றும் நெல்லை அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள், அரசு சிகிச்சை மையங்களில் சேர்க்கப்பட்டனர். இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 478 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 9 ஆயிரத்து 51 பேர் சிகிச்சையால் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,258 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story