கோவில் நிலத்தை அளவீடு செய்ய எதிர்ப்பு வருவாய்த்துறையினரை பொதுமக்கள் முற்றுகை


கோவில் நிலத்தை அளவீடு செய்ய எதிர்ப்பு வருவாய்த்துறையினரை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 24 April 2021 3:53 AM IST (Updated: 24 April 2021 3:53 AM IST)
t-max-icont-min-icon

வருவாய்த்துறையினரை பொதுமக்கள் முற்றுகை

இளம்பிள்ளை:
இளம்பிள்ளை அருகே கோவில் நிலத்தை அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்து வருவாய்த்துறையினரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
கோவில் நிலம் அளவீடு
இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்டது கஞ்சமலை சித்தர் கோவில். இந்த கோவில் நிலத்தை அளவீடு செய்யும் பணிக்காக சேலம் மேற்கு தாசில்தார் மாதேஸ்வரன் தலைமையிலான வருவாய்த்துறையினர் நேற்று காலை சித்தர்கோவில் பகுதிக்கு வந்திருந்தனர். 
அதாவது இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் தமிழரசு, சித்தர் கோவில் செயல் அலுவலர் பரமேஸ்வரன், இடங்கணசாலை பேரூராட்சி செயல் அலுவலர் பாலகிருஷ்ணன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், நில அளவையர்கள் வந்து, அளவீடு பணியில் ஈடுபட முயன்றனர்.
பொதுமக்கள் எதிர்ப்பு
அப்போது சித்தர் கோவில் அடிவார பகுதியில் உள்ள சத்யா நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நில அளவீடு செய்யும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவாய்த்துறையினரை முற்றுகையிட்டனர். இது குறித்து பொதுமக்கள் கூறும் போது, இந்த பகுதியில் 80 வீடுகள் உள்ளன. நாங்கள் 50 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்ேதாம். அதன் பேரில் வீடுகள் உள்ள பகுதிகளில் வருவாய் துறையினர் அளவீடு செய்து சென்றனர். எனவே ஏற்கனவே அளவீடு செய்யப்பட்ட பகுதிகளை தவிர்த்து மற்ற இடங்களை அளவீடு செய்யுங்கள் என்று கூறினர். இதனால் அதிகாரிகள் அளவீடு செய்யாமல் திரும்பிச்சென்றனர். 
இதையொட்டி இரும்பாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகலா, மகுடஞ்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துசாமி மற்றும் போலீசார்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story