சென்னையில் கொரோனா தடுப்பு விதிகளை மீறியவர்களிடம் ரூ.4.12 கோடி அபராதம் வசூல்


சென்னையில் கொரோனா தடுப்பு விதிகளை மீறியவர்களிடம் ரூ.4.12 கோடி அபராதம் வசூல்
x
தினத்தந்தி 24 April 2021 1:16 AM GMT (Updated: 24 April 2021 1:16 AM GMT)

சென்னையில் கொரோனா தடுப்பு விதிகளை மீறியவர்களிடம் ரூ.4.12 கோடி அபராதம் வசூல் மாநகராட்சி தகவல்.

சென்னை, 

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், உணவகங்கள், அங்காடிகள் போன்றவற்றில் அரசின் கொரோனா தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா? என மாநகராட்சி அலுவலர்களால் தொடர்ந்து கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

அதன்படி, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாதவர்களிடமிருந்து இதுவரை மொத்தம் ரூ.4.12 கோடி அபராதத்தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. அபராதத்தொகை வசூலிப்பது என்பது அரசின் நோக்கமல்ல. பொதுமக்கள் தங்களின் தவறை உணர்ந்து பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றவே இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Next Story