செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 985 பேர் பாதிப்பு


செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 985 பேர் பாதிப்பு
x

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 985 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 985 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 71 ஆயிரத்து 474 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 62 ஆயிரத்து 393 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்தனர்.

இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 895 ஆக உயர்ந்தது. 8 ஆயிரத்து 186 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 395 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35 ஆயிரத்து 59 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 32 ஆயிரத்து 263 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்தனர். இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 496 ஆக உயர்ந்துள்ளது. 2 ஆயிரத்து 300 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story