கேரளாவில் முழு ஊரடங்கு: தமிழகத்தில் இருந்து வாகனங்கள் செல்ல தடை


கேரளாவில் முழு ஊரடங்கு:  தமிழகத்தில் இருந்து வாகனங்கள் செல்ல தடை
x
தினத்தந்தி 24 April 2021 6:20 PM IST (Updated: 24 April 2021 6:28 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் முழு ஊரடங்கையொட்டி தமிழகத்தில் இருந்து வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கம்பம்:
கேரளாவில் கொேரானா பரவலை தடுக்க நேற்றும், இன்றும்(ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்த கேரள மாநில அரசு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி கேரளாவில் நேற்று முழு ஊரடங்கு அமலில் இருந்தது. 
இதுகுறித்து இடுக்கி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கருப்பசாமி, தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்விக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு எல்லைப்பகுதிகளில் தமிழக போலீசார் சார்பில் கேரள மாநிலத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது குறித்து பேனர் வைக்கப்பட்டிருந்தது. கம்பத்தில் கம்பம்மெட்டு சாலை பிரிவில் பேனர் வைக்கப்பட்டிருந்தது.
இதனிடையே முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் போலீசார் நேற்று பால், செய்தித்தாள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை எடுத்து செல்லும் வாகனங்களை தவிர மற்ற வாகனங்களை கம்பம்மெட்டு சாலையில் உள்ள பழைய போலீஸ் சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

Next Story