சினிமா தியேட்டருக்கு 2வது முறையாக அபராதம்


சினிமா தியேட்டருக்கு 2வது முறையாக அபராதம்
x
தினத்தந்தி 24 April 2021 6:32 PM IST (Updated: 24 April 2021 6:32 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத சினிமா தியேட்டருக்கு 2வது முறையாக அபராதம் விதிக்கப்பட்டது.

ஆற்காடு

கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத சினிமா தியேட்டருக்கு 2-வது முறையாக அபராதம் விதிக்கப்பட்டது.

கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வணிக நிறுவனங்கள், தியேட்டர்கள், அலுவலகங்களுக்கு வழிகாட்டுதல் நெறிமுறைகள் வகுக்கப்பட்டது. அதன்படி தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். முக கவசம் அணிய செய்வதோடு சமூக இடைெவளி விட்டு பார்வையாளர்களை அமர வைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில் ஆற்காட்டில் இருந்து ஆரணி செல்லும் சாலையில் உள்ள ஒரு திரையரங்கில் வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடிக்காமல் அதிக நபர்களை படம் பார்க்க அனுமதிப்பதாக வருவாய்த்துறையினருக்கு புகார்கள் வந்தன.

இதனையடுத்து ஆற்காடு தாசில்தார் காமாட்சி மற்றும் வருவாய் துறையினர் சம்பந்தப்பட்ட தியேட்டருக்குள் சென்று சோதனை நடத்தினர். அப்போது சமூக இடைவெளியை பின்பற்றாமல், முகக் கவசம் அணியாமல் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டது உறுதிணானது. 

இதனைத் தொடர்ந்து தியேட்டக்கு ரூ.1,700அபராதம் விதித்து தாசில்தார் காமாட்சி நடவடிக்கை எடுத்தார். மேலும் இதே தியேட்டரில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அதிக நபர்களை படம் பார்க்க அனுமதித்ததற்காக ரூ.9 ஆயிரத்து 700 அபராதம் விதிக்கப்பட்டது  குறிப்பிடத்தக்கது.

Next Story