வங்கி ஊழியர் உள்பட 2 பேர் கொரோனோ தொற்றால் பலி


வங்கி ஊழியர் உள்பட 2 பேர் கொரோனோ தொற்றால் பலி
x
தினத்தந்தி 24 April 2021 6:45 PM IST (Updated: 24 April 2021 6:45 PM IST)
t-max-icont-min-icon

குடியாத்தத்தில் வங்கி ஊழியர் உள்பட 2 பேர் கொரோனா தொற்றால் பலியானார்கள்.

குடியாத்தம்

குடியாத்தத்தில் வங்கி ஊழியர் உள்பட 2 பேர் கொரோனா தொற்றால் பலியானார்கள்.

வேலூர் மாவட்டத்தில் கொரோனோ தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இருப்பினும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. பாதிக்கப்பட்ட நபர்கள் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

குடியாத்தம் தங்கம் நகர் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற போலீஸ் ஏட்டு மனைவி கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாததால் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். 64 வயதான அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனோ தொற்று இருப்பது தெரியவந்தது தொடர் சிகிச்சையில் இருந்த அந்தப் பெண் நேற்று  சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

குடியாத்தம் கஸ்பா கவுதம பேட்டையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் உடல்நலக்குறைவால் சில தினங்களுக்கு முன் வேலூரில் உள்ள அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்தார். 62 வயதான அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனோ தொற்று உறுதியானது. 

தொடர் சிகிச்சையில் இருந்த அந்த வங்கி ஊழியர் இன்று காலை சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

Next Story