வைகை அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 6 நாட்கள் தண்ணீர் திறப்பு


வைகை அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 6 நாட்கள் தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 24 April 2021 6:45 PM IST (Updated: 24 April 2021 6:45 PM IST)
t-max-icont-min-icon

வைகை அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 6 நாட்கள் தண்ணீர் திறக்கப்பட்டது.

ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. இதன் நீர்மட்டம் தற்போது 63.24 அடியாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மதுரை சித்திரை திருவிழா, வைகை ஆற்றில் அழகர் எழுந்தருளும் நிகழ்ச்சிக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். ஆனால் கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் கொரோனா பரவல் காரணமாக மதுரை சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டது. 
இந்நிலையில் வைகை அணையில் 63 அடி வரை தண்ணீர் உள்ளதால், சித்திரை திருவிழாவிற்கு திறக்கப்பட வேண்டிய தண்ணீரை குடிநீர் தேவைக்காக திறக்க அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து நேற்று காலை 6 மணிமுதல் வைகை அணையில் இருந்து வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் வருகிற 29-ந்தேதி வரை 6 நாட்கள் திறக்கப்பட உள்ளது. தண்ணீர் திறப்பு 2-வது நாளான இன்று(ஞாயிற்றுக்கிழமை) முதல் 29-ந்தேதி வரை வினாடிக்கு 300 கனஅடி வீதம் என குறைக்கப்பட உள்ளது. 
6 நாட்களில் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 216 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இந்த தண்ணீரின் மூலம் வைகை ஆற்றில் குடிநீருக்காக அமைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான உறைகிணறுகளில் தண்ணீர் சுரக்கும் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

Next Story