கோடை காலத்தில் பட்டுப்புழு வளர்ப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று வனக்கல்லூரி பட்டுப்புழுவியல் துறை மாணவிகள் விளக்கமளித்துள்ளனர்.
கோடை காலத்தில் பட்டுப்புழு வளர்ப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று வனக்கல்லூரி பட்டுப்புழுவியல் துறை மாணவிகள் விளக்கமளித்துள்ளனர்.
போடிப்பட்டி,
கோடை காலத்தில் பட்டுப்புழு வளர்ப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று வனக்கல்லூரி பட்டுப்புழுவியல் துறை மாணவிகள் விளக்கமளித்துள்ளனர்.
வெண்பட்டு உற்பத்தி
தமிழகம் முழுவதுமுள்ள வெண்பட்டு உற்பத்தியில் உடுமலைக்கு தனி இடம் உண்டு. இங்குள்ள இதமான பருவநிலை மல்பெரி சாகுபடிக்கும், வெண்பட்டுக்கூடு உற்பத்திக்கும் சாதகமானதாக இருப்பதால் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் வெண்பட்டுக்கூடு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கோடைக்காலத்தில் பட்டுப்புழு வளர்ப்பில் கூடுதல் கவனம் செலுத்தாவிட்டால் பால் புழு நோய் உள்ளிட்ட நோய்கள் தாக்குதலால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படக்கூடும் என்று விவசாயிகளுக்கு மாணவிகள் விளக்கமளித்துள்ளார்.
பட்டுப்புழு பராமரிப்பு
மேட்டுப்பாளையம் வனக்கல்லூரியில் 4-ம் ஆண்டு பட்டுப்புழுவியல் துறை மாணவிகள் உடுமலையில் தங்கி பயிற்சி பெற்று வருகிறார்கள். அந்தவகையில் ஆத்துக்கிணத்துப்பட்டி பகுதியில் பட்டுப்புழு விவசாயிகளிடம் கோடைக்காலத்தில் பட்டுப்புழு பராமரிப்பு குறித்து விளக்கினர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:-
அனுபவ விவசாயிகளிடம் நேரடியாகச் சென்று பட்டு வளர்ப்பு குறித்து அறிந்து கொள்கிறோம். அத்துடன் நாங்கள் கற்றுக் கொண்ட விஷயங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
சீரான காற்றோட்ட வசதி
பட்டுப் புழுக்களைப் பொறுத்தவரை அதிக வெப்பத்தைத் தாங்கிக் கொள்ளாது. மேலும் கோடைக்காலத்தில் பட்டுப்புழுக்கள் வளர்ப்பில் பாக்டீரியாக்கள், வைரஸ்கள் போன்றவற்றின் பாதிப்புகள் ஏற்படக்கூடும்.எனவே முறையான பராமரிப்பின் மூலம் மட்டுமே சிறந்த அறுவடை பெற முடியும். கோடைக்காலத்தில் மல்பெரி இலைகள் எளிதில் வாடி விடும்.
ஆனால் வாடிய, தூசி படிந்த இலைகளை புழுக்களுக்கு உணவாகக் கொடுக்கக் கூடாது. மேலும் புழு வளர்ப்பு மனைகளில் சீரான காற்றோட்ட வசதி இருக்க வேண்டும். இங்கு வெப்ப நிலை சீராக பராமரிக்கப்படுவதற்கு தென்னை அல்லது பனை ஓலைகளால் கூரைகள் அமைப்பது சிறந்தது. மேலும் கோடைக்காலத்தில் வெப்பக்காற்று புழு வளர்ப்பு மனைக்குள் வராமல் தடுக்கும் வண்ணம் ஈரச்சாக்குகளை ஜன்னல்களில் கட்டி தொங்க விடலாம்.
நோய் தாக்குதல்
ஏனென்றால் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் நேரங்களில் பால்புழு நோய் தாக்குதல் ஏற்படக்கூடும். பட்டுப்புழுக்கள் தட்டை விட்டு இறங்கி வருவது பால் புழு நோய் தாக்குதலின் அறிகுறியாகும்.இந்த நோய் தாக்குதலால் புழுக்கள் அதிக அளவில் உயிரிழந்து மகசூல் இழப்பு ஏற்படும்.
இதனைத் தவிர்க்க முன்னெச்சரிக்கையாக அதிக வெப்பம் இருக்கும் பருவத்தில் பனிக்கட்டிகளுடன் கூடிய பானைகளை உறியில் கட்டி புழு வளர்ப்புக் கூடத்தின் பல இடங்களில் தொங்க விடலாம். இவ்வாறு செய்யும்போது வெப்பத்தின் தாக்கம் குறைந்து புழுக்கள் ஆரோக்கியமாக பட்டு உற்பத்தியில் ஈடுபடும். மேலும் சுண்ணாம்புத்தூள் தூவி அறைகளை சுத்தமாக பராமரிப்பது அவசியமாகும். இவ்வாறு மாணவிகள் விளக்கமளித்தனர்.
இதில் அந்த பகுதியைச் சேர்ந்த பட்டு விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story