மடத்துக்குளம் பேரூராட்சியில் பாதையை ஆக்கிரமித்துள்ள சந்தை வியாபாரிகள்
மடத்துக்குளம் பேரூராட்சியில் பாதையை ஆக்கிரமித்துள்ள சந்தை வியாபாரிகள்
மடத்துக்குளம்
மடத்துக்குளம் தாசில்தார் அலுவலகம் செல்ல 2 வழிப்பாதைகள் உள்ளது. ஒன்று பழனி- உடுமலை தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள முன் வழிப்பாதை. இன்னொன்று பஸ் நிலையத்தை ஒட்டியே செல்லும் பின் வழிப்பாதை என 2 வழிப்பாதைகள் உள்ளன. இந்த பஸ் நிலையத்தை ஒட்டி அமைந்துள்ள பாதைகள், பொதுமக்களுக்கு மிகவும் சவுகரியமான, விரைவாக செல்லும் பாதை ஆகும். மேலும் இந்த சாலையின் வழியே கிராம நிர்வாக அலுவலகம், வருவாய்த்துறை அலுவலகம், நெடுஞ்சாலைத்துறை அலுவலகம், கருவூல அலுவலகம் என முக்கிய அலுவலகங்களுக்கு செல்ல, பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் சாலை ஆகும். மேலும் பெரும்பாலான இருசக்கர வாகனங்கள், பாதசாரிகள் பயணம் செய்யும் முக்கிய சாலையாகவும் உள்ளது.
இந்நிலையில் மடத்துக்குளம் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் நடைபெறும் வாரச்சந்தை, இப்பகுதியில் வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெறுகிறது. இந்த வாரச்சந்தையில் பொதுமக்கள் பயன்படுத்தி வரும், பொது வழிச்சாலையை வழிமறித்து வாரச்சந்தை வியாபாரிகள் தற்காலிக கடையை அமைத்து விற்பனை செய்து வருகின்றனர். இதன் காரணமாக இவ்வழியே தாசில்தார் அலுவலகம் செல்லும் பொதுமக்கள் இருசக்கர வாகன ஓட்டிகள், மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே வாரச்சந்தையில் ஈடுபடும் வியாபாரிகளுக்கு, போதிய வழிகாட்டுதல் வழங்கி, பொதுமக்களுக்கும்-வியாபாரிகளுக்கும் ஏற்படும் பிரச்சினைகளை நீக்க மடத்துக்குளம் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story