மடத்துக்குளத்தில் பஸ் நிலையத்திற்குள் வராமல் செல்லும் அரசு பஸ்கள்
மடத்துக்குளத்தில் பஸ் நிலையத்திற்குள் வராமல் செல்லும் அரசு பஸ்கள்
மடத்துக்குளம்,
மடத்துக்குளம் பஸ் நிலையத்தில் இருந்து தாராபுரம், பழனி, உடுமலை, பொள்ளாச்சி, கோவை, கீரனூர், குமரலிங்கம், கணியூர், போன்ற பல்வேறு பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மடத்துக்குளம் பஸ் நிலையத்தின் உள்ளே இப்பகுதிகளுக்கு செல்ல ஏராளமான பயணிகள் காத்திருந்து, சம்பந்தப்பட்ட பஸ்களில் பயணம் செய்வது வழக்கம்.
ஆனால் கடந்த சில நாட்களாக மடத்துக்குளம் பஸ் நிலையத்தில், வழக்கமாக உள்ளே சென்று, அங்கு காத்திருக்கும் பயணிகளை ஏற்றி செல்லும் அரசு விரைவு பஸ்கள், கடந்த சில நாட்களாக மடத்துக்குளம் பஸ் நிலையத்திற்குள் செல்லாமல், பழனி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் நின்றவாறே சென்று வருகிறது. இதனால் மடத்துக்குளம் பஸ் நிலையத்திற்குள் காத்திருக்கும் பயணிகள், மாற்றுத்திறனாளிகள், மிகவும் ஏமாற்றத்துடன் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாவதாக கூறுகின்றனர். இதனால் குறிப்பிட்ட இடங்களுக்கு, குறிப்பிட்ட நேரங்களில் செல்ல முடியாமல், மாற்று பஸ்கள் அல்லது வாடகை வாகனங்களால் செல்வதால், கூடுதல் செலவு, காலதாமதமும் ஏற்படுகின்றன. எனவே மடத்துக்குளம் பஸ் நிலையத்தின் உள்ளே காத்திருக்கும் பயணிகளை ஏற்றி செல்ல, இப்பகுதியில் இயக்கப்படும், அரசு விரைவு பஸ்கள், மடத்துக்குளம் பஸ் நிலையத்திற்கு உள்ளே சென்று பயணிகளை ஏற்றி செல்ல, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story