வேடசந்தூர் அருகே விலை வீழ்ச்சியால் சாலையோரம் கொட்டப்படும் தக்காளி
வேடசந்தூர் அருகே விலை வீழ்ச்சியால் தக்காளி பழங்களை விவசாயிகள் சாலையோரம் கொட்டி சென்றனர்.
வேடசந்தூர்:
வேடசந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள குட்டம், கோட்டூர், கல்வார்பட்டி, அழகாபுரி, கோவிலூர், எரியோடு, புதுரோடு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவு தக்காளியை சாகுபடி செய்திருந்தனர். தற்போது அவை அறுவடை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் தக்காளி விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தக்காளி விலை கிலோ ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனை ஆனது. இதனால் விவசாயிகள் அதிக அளவு தக்காளியை சாகுபடி செய்தனர். ஆனால் தற்போது வரத்து அதிகமானதால் தக்காளியின் விலை குறைந்துவிட்டது. மார்க்கெட்டில் 15 கிலோ கொண்ட தக்காளி பெட்டியின் விலை ரூ.30 முதல் ரூ.60 வரை மட்டுமே விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். இதனால் ஒரு கிலோ தக்காளி ரூ.2ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.
இதனால் பறிப்பு கூலிக்கு கூட விலை கட்டுபடியாகாதால் பல விவசாயிகள் தக்காளியை பறிக்காமல் செடியிலேயே விட்டுள்ளனர். இன்னும் சில விவசாயிகள், பறித்த தக்காளியை மினிவேனில் மார்க்கெட்டுக்கு கொண்டு சென்றால் அதன் வாடகைக்கு கூட கட்டுபடியாகாது என்பதால் வேறு வழியின்றி அவற்றை சாலையோரங்களில் கொட்டிவிட்டு சென்றனர்.
Related Tags :
Next Story