சிறுமியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் போக்சோவில் கைது
சிறுமியை கர்ப்பிணியாக்கிய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
பந்தலூர்,
நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியை சேர்ந்த சுதாகரன்(வயது 24) என்பவருக்கும், 16 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக்கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதற்கிடையில் சமீபத்தில் திடீரென சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவளை பெற்றோர் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்ததில், சிறுமி 6 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவளிடம் பெற்றோர் கேட்டபோது, தன்னை சுதாகரன் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி கதறி அழுதாள்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், தேவாலா அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சுதாகரனை கைது செய்தனர்.
Related Tags :
Next Story