நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழையால் குளம், குட்டைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு


நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழையால் குளம், குட்டைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 24 April 2021 8:17 PM IST (Updated: 24 April 2021 8:55 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் குளம், குட்டைகள் நிரம்பி வருகிறது.

கூடலூர்,

நீலகிரி மாவட்டம் கூடலூர், முதுமலை ஆகிய பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக கோடை வெயில் அதிகமாக இருந்தது. இதனால் மரம், செடி, கொடிகள் கருகியதோடு அனைத்து நீர்நிலைகளும் வறண்டு வந்தது. தொடர்ந்து வனவிலங்குகளுக்கு குடிநீர் மற்றும் பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் அவை ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்தது.

இதற்கிடையில் வனவிலங்குகளின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க  வனத்துறை சார்பில் வனப்பகுதியில் தரைத்தள சிமெண்டு தொட்டிகள் கட்டப்பட்டு உள்ளது. அதில் லாரிகளில் கொண்டு வந்து தண்ணீர் வருகின்றனர். இருப்பினும் அது போதுமானதாக இல்லை. மேலும் பசுந்தீவன தட்டுப்பாட்டை போக்க முடியவில்லை. 

இந்த நிலையில் தற்போது கூடலூர், முதுமலை பகுதியில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து உள்ளது. மேலும் முதுமலை வனப்பகுதியில் உள்ள குளம், குட்டைகள் நிரம்பி வருகிறது. இதனால் வனவிலங்குகளின் குடிநீர் தட்டுப்பாடுக்கு தீர்வு ஏற்பட்டு உள்ளது. 

Next Story