பர்லியார் சோதனைச்சாவடியில் வாகன சோதனை தீவிரம்
குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பர்லியார் சோதனைச்சாவடியில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
குன்னூர்,
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அரசு அறிவித்து உள்ளது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டு உள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
இதையொட்டி நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு செல்லும் சாலையில் பர்லியார் உள்ளது. இது நீலகிரி மாவட்டத்தின் நுழைவு வாயிலாக விளங்குகிறது.
இங்குள்ள சோதனைச்சாவடியில் போலீசார், வருவாய்த்துறையினர், சுகாதாரத்துறையினர் இணைந்து தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். அத்தியாவசிய தேவைகளுக்காக நீலகிரிக்கு வரும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. அதில் வருபவர்கள் இ-பதிவு செய்து உள்ளனரா? என்று அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர்.
அப்போது இ-பதிவு செய்யாமல் வரும் வாகனங்களை திரும்ப அனுப்புகின்றனர். உள்ளூர் வாகனங்களுக்கு உரிய ஆவணங்களை காண்பித்தால் அனுமதி வழங்கப்படுகிறது.
Related Tags :
Next Story