வெள்ளகோவில் அருகேமலேரியா காய்ச்சல் விழிப்புணர்வு


வெள்ளகோவில் அருகேமலேரியா காய்ச்சல் விழிப்புணர்வு
x
தினத்தந்தி 24 April 2021 9:50 PM IST (Updated: 24 April 2021 9:50 PM IST)
t-max-icont-min-icon

வெள்ளகோவில் அருகேமலேரியா காய்ச்சல் விழிப்புணர்வு

வெள்ளகோவில்
வெள்ளகோவில் ஒன்றியம் சேனாபதிபாளையம் கிராமத்தில் உலக மலேரியா தினத்தை முன்னிட்டு நேற்று வெள்ளகோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி, பொதுமக்கள், கிராம துப்புரவு பணியாளர்கள், தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் பணியாற்றுவோருக்கு மலேரியா காய்ச்சல் பற்றி விளக்கிக் கூறினர். அப்போது கொசுக்கள் பற்றியும் அதனுடைய பாதிப்புகள் பற்றியும் விளக்கிக் கூறினார். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர்கள் உடன் இருந்தனர்.

Next Story