அளவுக்கு அதிகமாக மது குடித்த பெண் சாவு


அளவுக்கு அதிகமாக மது குடித்த பெண் சாவு
x
அளவுக்கு அதிகமாக மது குடித்த பெண் சாவு
தினத்தந்தி 24 April 2021 9:55 PM IST (Updated: 24 April 2021 9:55 PM IST)
t-max-icont-min-icon

அளவுக்கு அதிகமாக மது குடித்த பெண் சாவு

கோவை, ஏப்.25-

கோவை ராமநாதபுரம் அருகே கணேசபுரம் மருதாச்சலம் தேவர் வீதியை சேர்ந்தவர் சார்லஸ். இவருடைய மனைவி ரீனா இமாகுலேட் (வயது 39). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 

குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சார்லஸ் மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து வெளிநாட்டுக்கு சென்று விட்டார்.

இதனால் மன வேதனை அடைந்த ரீனா இமாகுலேட் கவலையை மறக்க மது குடிக்க தொடங்கியதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் அவர் மதுவுக்கு அடிமையானார். எனவே மது குடிப்பதை நிறுத்துமாறு அவருடைய மகன்கள் வலியுறுத்தினர். ஆனாலும் அவர் மது பழக்கத்தில் இருந்து மீள வில்லை.


அவர், கடந்த 22-ந் தேதி இரவு அளவுக்கு அதிகமாக மது குடித்தார். ஒரு கட்டத்தில் அவர் மயங்கி விழுந்தார். இதனால் அவர் தூங்குவதாக கருதி மகன்களும் தூங்கச் சென்றனர். மறுநாள் காலை மூத்த மகன் எழுந்து அம்மாவை எழுப்பினார். ஆனால் அவர் அசைவற்று இருந்தார். 

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வெளியே வந்து சத்தம்போட்டு அழுதார். உடனே அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். 

அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில் ரீனா இமாகுலேட் இறந்தது தெரிய வந்தது.

இது குறித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் போலீசார் விரைந்து வந்து ரீனா இமாகுலேடின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story