பாப்பாரப்பட்டி அருகே தொழிலாளி வீட்டில் 14 பவுன் நகை திருட்டு வாலிபர் கைது


பாப்பாரப்பட்டி அருகே தொழிலாளி வீட்டில் 14 பவுன் நகை திருட்டு வாலிபர் கைது
x
தினத்தந்தி 24 April 2021 9:58 PM IST (Updated: 24 April 2021 9:58 PM IST)
t-max-icont-min-icon

பாப்பாரப்பட்டி அருகே தொழிலாளி வீட்டில் 14 பவுன் நகை திருடிய பக்கத்து வீட்டு வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பாப்பாரப்பட்டி:
பாப்பாரப்பட்டி அருகே தொழிலாளி வீட்டில் 14 பவுன் நகை திருடிய பக்கத்து வீட்டு வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தொழிலாளி
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள தொட்லாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவர் ஓசூரில் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி நாகராணி (வயது 38). இவர் தொட்லாம்பட்டியில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் கடந்த 20-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு வெளியில் சென்றுள்ளார். 
பின்னர் வீட்டுக்கு வந்த போது கதவு திறந்து இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 14 பவுன் நகைகள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து நாகராணி பாப்பாரப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 
வாலிபர் கைது
அப்போது நாகராணியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் சிவா (26) என்ற வாலிபர் நகையை திருடி சென்றது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் சிவாவை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து நகைகளை மீட்டனர்.

Next Story