ஏரியூர் பஸ் நிலையத்தில் சுற்றுச்சுவர் கட்ட எதிர்ப்பு; பொதுமக்கள் போராட்டம்
ஏரியூர் பஸ் நிலையத்தில் சுற்றுச்சுவர் கட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏரியூர்:
ஏரியூர் பஸ் நிலையத்தில் சுற்றுச்சுவர் கட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுற்றுச்சுவர்
தர்மபுரி மாவட்டம் ஏரியூரில் ரூ.3.5 கோடியில் பஸ் நிலைய கட்டுமான பணி கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. தற்போது இறுதி கட்ட பணியாக பஸ் நிலைய சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றுச்சுவர் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. பஸ் நிலையத்தின் அருகில் வசிக்கும் பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று திடீரென சுற்றுச்சுவர் கட்ட எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் அவர்கள் கட்டுமான பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அமரவேல், பென்னாகரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுந்தர்ராஜன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பாதை வசதி
அப்போது பஸ் நிைலயத்திற்கு சென்று வர பின் பகுதியில் பாதை வசதி வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். பொதுமக்களின் கோரிக்கை குறித்து கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். சுற்றுச்சுவர் கட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story