உதயமார்த்தாண்டபுரத்தில் ஊராட்சி தலைவரை கண்டித்து, உறுப்பினர் உள்ளிருப்பு போராட்டம்


உதயமார்த்தாண்டபுரத்தில் ஊராட்சி தலைவரை கண்டித்து, உறுப்பினர் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 24 April 2021 10:15 PM IST (Updated: 24 April 2021 10:15 PM IST)
t-max-icont-min-icon

உதயமார்த்தாண்டபுரத்தில் ஊராட்சி தலைவரை கண்டித்து ஊராட்சி உறுப்பினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

முத்துப்பேட்டை:-

உதயமார்த்தாண்டபுரத்தில் ஊராட்சி தலைவரை கண்டித்து ஊராட்சி உறுப்பினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். 

ஊராட்சி உறுப்பினர் போராட்டம்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சி 5-வது வார்டு உறுப்பினராக இருப்பவர் நாச்சிகுளம் தாஜுதீன். இவர் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் ஆவார். 
அடிப்படை வசதிகளை செய்து தராத ஊராட்சி தலைவரை கண்டித்து நேற்று அவர் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறுகையில், ‘உள்ளாட்சி தேர்தல் நடந்து 1½ ஆண்டு முடிந்து விட்டது. இதுவரை எனது பகுதிக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளையும் செய்துகொடுக்க வில்லை. குடிநீர் பிரச்சினை எனது பகுதிக்கு மட்டுமின்றி ஊராட்சி முழுவதும் உள்ளது. அதனை தீர்க்க முறையான நடவடிக்கை இல்லை. 

இரவு, பகலாக ஈடுபடுவேன்

மழைக்காலம் வந்தால் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கும் சூழ்நிலை உள்ளது. அதனை சரி செய்ய முன்வரவில்லை. அதுமட்டுமின்றி பல்வேறு முறைகேடுகளும் நடந்து வருகிறது. அதனால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன். 
அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வந்தால் போராட்டத்தை கைவிடுவேன். இல்லையென்றால் போராட்டத்தில் தொடர்ந்து இரவு, பகலாக ஈடுபடுவேன்’ என்றார். இந்த போராட்டம் நேற்று மாலை வரை நீடித்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story