இன்று நாட்டுப்படகுகள் மீன் பிடிக்க தடை
இன்று நாட்டுப்படகுகள் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ராமேசுவரம்,
கொரோனா பரவல் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருவதன் எதிரொலியாக கடந்த 20-ந் தேதி முதல் தமிழகத்தில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அமலில் இருந்து வருகிறது. அதுபோல் வருகிற ஏப்ரல் மாதம் 30-ந் தேதி வரையிலும் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் முழு ஊரடங்கும் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால் ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், தனுஷ்கோடி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் எந்தவொரு படகுகளும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல கூடாது என்று தடைவிதிக்கப்பட்டு மீன் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனால் ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், தனுஷ்கோடி உள்பட மாவட்டம் முழுவதும் சுமார் 4 ஆயிரத்திற்கும் அதிகமான நாட்டுப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் கரையோரம் உள்ள கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே 61 நாள் மீன்பிடி தடை காலம் அமலில் உள்ளதால் விசைப்படகுகள் கடந்த 15-ந் தேதி முதல் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story