திருக்கோவிலூர் பகுதியில் அறிவிக்கப்படாத மின்தடையால் பொதுமக்கள் பாதிப்பு
திருக்கோவிலூர் பகுதியில் அறிவிக்கப்படாத மின்தடையால் பொதுமக்கள் பாதிப்பு
திருக்கோவிலூர்
கோடைகாலம் தொடங்கியதை அடுத்து மாவட்டத்தின் சில பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்தடை இருந்து வருகிறது. அந்த வகையில் திருக்கோவிலூரிலும் தினமும் 5 முதல் 10 முறை மின்சாரம் தடை ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள், வியாபாரிகள், மாணவ-மாணவிகள் பொதுமக்கள் கடும் அவதி அடைந்த வருகின்றனர். மின்சாரம் எப்போது வரும், போகும் என்று சொல்ல முடியாத வகையில் மின்சாரம் தடை ஏற்படுகிறது. இதற்கான காரணத்தை மின்சார வாரியம் தெரிவிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது குறித்து திருக்கோவிலூர் பகுதிமக்கள் கூறும்போது, தற்போது சுட்டெரிக்கும் வெயிலால் புழுக்கம் ஏற்பட்டு உடலில் வியர்வை நீர் வடிகிறது. மின்விசிறி, ஏசி ஆகியவற்றை ஓடவிட்டு சற்று இளைப்பாரலாம் என்றால் மின்தடையால் அவற்றை இயக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இணையதளம் மூலம் பாடங்களை படித்து வரும் மாணவர்களின் படிப்பும் பாதிக்கப்படுகிறது. அடுத்து நகைகளை அடகு வைத்தும், கடன் வாங்கியும் கோடையில் பயிர்களை சாகுபடி செய்துள்ளோம். ஆனால் மின்தடையால் வயலுக்கு நீர் பாய்ச்சுவதற்கு மின்சார மோட்டாரை இயக்க முடியாமல் போவதால் கொளுத்தும் வெயிலில் பயிர்கள் கருகி சேதம் அடைந்து வருகிறது. மின்சாரம் எப்போது வரும், போகும் என்றே தெரியாத நிலை உள்ளது. எனவே திருக்கோவிலூர் பகுதியில் அறிவிக்கப்படாத மின்தடை எதனால் ஏற்படுகின்றது என்பதை மின்வாரியம் பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் மேலும் மின்தடை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story