கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு


கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
x
தினத்தந்தி 24 April 2021 11:18 PM IST (Updated: 24 April 2021 11:18 PM IST)
t-max-icont-min-icon

கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

கரூர்
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நேற்று சனி பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி கோவிலில் உள்ள நந்திக்கு பால், பன்னீர், தயிர், மஞ்சள், இளநீர் உள்பட 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து நந்திக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. பின்னர் மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

Next Story