திருச்சியில் உள்ள நகை பட்டறையில் 250 கிராம் தங்கத்தை திருடி விற்ற ஊழியர் கைது


திருச்சியில் உள்ள நகை பட்டறையில்  250 கிராம் தங்கத்தை திருடி விற்ற ஊழியர் கைது
x
தினத்தந்தி 25 April 2021 12:59 AM IST (Updated: 25 April 2021 12:59 AM IST)
t-max-icont-min-icon

250 கிராம் தங்கத்தை திருடி விற்ற ஊழியர் கைது செய்தனர்.


மலைக்கோட்டை,

நகை பட்டறையில் 250 கிராம் தங்கத்தை திருடி விற்ற ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

250 கிராம் தங்கம் திருட்டு

திருச்சி பெரிய கடை வீதி வெள்ளை வெற்றிலை கார தெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது 40). இவர் அதே பகுதியில் நகை பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இங்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் வேலைக்கு சேர்ந்தார்.

வழக்கம் போல் ஆர்டரின் பேரில் நகைகள் செய்வதற்காக 250 கிராம் தங்கத்தை மொத்தமாக வாங்கினார். அதை ராதாகிருஷ்ணனிடம் கொடுத்து மோதிரங்கள் செய்யும்படி கூறியுள்ளார். இந்தநிலையில் கடந்த 3-ந்தேதி 250 கிராம் தங்கத்துடன் ராதா கிருஷ்ணன் மாயமானார். 

ஊழியர் கைது

இதுபற்றி சங்கர் கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுரையில் இருந்த ராதாகிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். 

விசாரணையில், அவர், அந்த தங்கத்தை திருடி, விற்றதும், அதை மறைக்க, தான் தங்கத்தை எடுத்து வந்த போது மர்ம நபர்கள் திருடிச்சென்றுவிட்டதாக போலீஸ் நிலையத்துக்கு பதிவு தபாலில் புகார் அனுப்பியதும் தெரியவந்தது. பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story