பதநீர், நுங்கு விற்பனை மும்முரம்
ராஜபாளையத்தில் பதநீர், நுங்கு விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
ராஜபாளையம்,
ராஜபாளையத்தில் பதநீர், நுங்கு விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
வெயிலின் தாக்கம்
ராஜபாளையத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஆதலால் இளநீர், தர்ப்பூசணி, குளிர்பானங்கள், கரும்பு சாறு ஆகியவற்றை வாங்கி மக்கள் அருந்தி வருகின்றனர்.
அதேபோல பதநீர், நுங்கு ஆகியவற்றின் விற்பனையும் மும்முரமாக நடைெபற்று வருகிறது.
அரசு அனுமதி
ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் மட்டுமே அதிகமாக கிடைக்கும் பதநீர், நுங்கு ஆகியவற்றையும் மக்கள் அதிக அளவில் வாங்கி பருகுகின்றனர்.
தற்போது பதநீர் சீசன் தொடங்கியுள்ளதால் ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பனைமரங்களிலிருந்து அரசு அனுமதியுடன் பதநீர் இறக்கி வருகின்றனர்.
விற்பனை மும்முரம்
கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் பதநீர் விற்பனை அமோகமாக விற்பனை செய்யப்பட்டுவருகிறது. வெயிலின் தாக்கத்தை தணிக்க பல வகையான குளிர்பானங்கள் இருந்தாலும் பதநீர் போன்ற பானம் மிகவும் சிறந்தது. உடலுக்கும் நல்லது.
பதநீரானது 150 மில்லி அளவு ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது. கோடை வெப்பத்தை தணிக்கவும், உடல் ஆரோக்கியத்திற்காகவும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன் பதநீர் மற்றும் நுங்கு ஆகியவற்றை வாங்கி பருகி செல்கின்றனர்.
இதனால் ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story