இறைச்சி கடைகளில் குவிந்த மக்கள்


இறைச்சி கடைகளில் குவிந்த மக்கள்
x
தினத்தந்தி 25 April 2021 1:13 AM IST (Updated: 25 April 2021 1:13 AM IST)
t-max-icont-min-icon

இன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் இறைச்சி கடைகளில் மக்கள் குவிந்தனர்.

சிவகாசி, ஏப்.25-
இன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் இறைச்சி கடைகளில் மக்கள் குவிந்தனர். 
இறைச்சி கடை 
வேகமாக பரவும் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அரசு ஏற்கனவே அறிவித்தது. ஊரடங்கு காலத்தில் அவசியம் இன்றி வெளியே வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர். 
இந்தநிலையில் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவில் மக்கள் இறைச்சி சாப்பிடுவது உண்டு. இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் சிவகாசி மற்றும் அதன் சுற்றுப் பகுதியில் நேற்று அதிக அளவில் இறைச்சி கடைகள் திறக்கப்பட்டு இருந்தது. 
சமூக இடைவெளி 
பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி இறைச்சிகளை வாங்கி சென்றனர். 
தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட மீன்களும் அதிகளவில் விற்பனையானது. பொதுமக்களின் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மீன் மற்றும் இறைச்சி வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story