சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
சனி பிரதோஷத்தையொட்டி மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
சாத்தூர்,
சனி பிரதோஷத்தையொட்டி மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
சிறப்பு வழிபாடு
சாத்தூர் மெயின் ரோட்டில் உள்ள விஸ்வநாதர் கோவிலில் சனி பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அதேபோல் சாத்தூர் சிதம்பரேஸ்வரர் கோவில், இருக்கன்குடி அருகே கைலாசநாதர் கோவில் உள்பட பல்வேறு சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
விருதுநகர்
விருதுநகர் சொக்கநாத சுவாமி கோவிலில் உள்ள நந்தீஸ்வரருக்கு சனி பிரதோஷத்தையொட்டி பால், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. அபிஷேகத்திற்கு பிறகு பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வழிபாடு செய்தனர்.
பிரதோஷத்தையொட்டி சிவகாசி சிவன் கோவிலில் நந்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. பிரதோஷ நிகழ்ச்சியின் போது பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
ஆலங்குளம்
ஆலங்குளம் சிமெண்டு ஆலை காலனியில் முருகன் கோவில் வளாகத்தில் உள்ள ஆகாய லிங்கேஸ்வர், சங்கர மூர்த்தி பட்டி அங்காளஸ்வரி அம்மன் கோவிலில் உள்ள சங்கரலிங்கசாமிக்கு, எதிர்கோட்டையில் உள்ள துணை கண்ட லிங்கேஸ்வரருக்கு பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே வாழவந்தாள்புரம் கிராமத்தில் மன்மத ராஜலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரதோஷத்ைதயொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அதேபோல சொக்கர் என்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், மாயூரநாதர் சாமி கோவில், அருணாச்சலேஸ்வரர் கோவில், குருசாமி கோவில், தெற்கு வெங்கநல்லூர் சிதம்பரேஸ்வரர் கோவில், சோழபுரம் விக்கிரம பாண்டீஸ்வரர் கோவில், பறவை அன்னம் காத்தருளிய சாமி கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.
Related Tags :
Next Story