ஒரே கிராமத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா


ஒரே கிராமத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 25 April 2021 1:26 AM IST (Updated: 25 April 2021 1:26 AM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரி அருகே ஒரே கிராமத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த கிராமத்துக்கு செல்லும் சாலை சீல் வைக்கப்பட்டது.

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி அருகே ஒரே கிராமத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த கிராமத்துக்கு செல்லும் சாலை சீல் வைக்கப்பட்டது.

6 பேருக்கு கொரோனா

 சிங்கம்புணரி ஒன்றியத்திற்குட்பட்ட பிரான்மலை ஊராட்சியில் தேனம்மாள்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
அதில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. ஒரே கிராமத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா ெதாற்று ஏற்பட்டதால் தாசில்தார் திருநாவுக்கரசு, வட்டார மருத்துவ அலுவலர் நபிஷா பானு மற்றும் மருத்துவ குழுவினர் அங்கு சென்றனர்.

சாலை சீல் வைப்பு

அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அந்த கிராமத்தில் உள்ள 97 வீடுகளின் முன்பும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.பின்னர் கொரோனா பாதித்த பகுதியாக அறிவித்து அந்த கிராமத்துக்கு வெளியாட்கள் செல்லவோ, அந்த கிராமத்தினர் வெளியிடங்களுக்கு செல்லவோ தடை விதித்து கிராமத்திற்கு செல்லும் சாலையை கம்புகளால் அடைத்து சீல் வைத்தனர்.இதையடுத்து அந்த கிராமத்தை சேர்ந்த 40 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Next Story