இன்று விடுமுறை எதிரொலி: டாஸ்மாக் கடைகளில் குவிந்த மது பிரியர்கள்
டாஸ்மாக் கடைகளுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
டாஸ்மாக் கடைகளுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
முன் எச்சரிக்கை நடவடிக்கை
ஈரோடு மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகள் மதியம் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூடப்பட்டது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் டாஸ்மாக் கடைகளில் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.
அதன்படி டாஸ்மாக் கடைக்கு வரும் மது பிரியர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டி தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் கடந்த வாரம் முதல் விற்பனை நேரமும் குறைக்கப்பட்டு உள்ளது.
மது பிரியர்கள் கூட்டம்
அதன்படி மதியம் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு மூடப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
அதனால் மது பிரியர்கள் தங்களுக்கு தேவையான மதுவகைகளை நேற்றே வாங்கி இருப்பு வைத்துக் கொண்டனர். இதன் காரணமாக ஈரோடு மாநகரில் பவானி ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை மற்றும் பெரிய வலசு, வாசுகி வீதி, சூரம்பட்டிவலசு உள்ளிட்ட அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் நேற்று மது பிரியர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் மது விற்பனையும் ஜோராக நடந்தது.
Related Tags :
Next Story