கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டதால் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி டிஸ்சார்ஜ்
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்தததை தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 2 வாரம் வீட்டு தனிமையில் ஓய்வெடுக்க வேண்டும் என்று அவருக்கு டாக்டர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர்.
பெங்களூரு:
குமாரசாமி டிஸ்சார்ஜ்
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமிக்கு கடந்த 17-ந் தேதி கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்த அவர், பெங்களூருவுக்கு திரும்பி வந்ததும் கொரோனா பரிசோதனை செய்திருந்தாா. அவருககு கொரோனா தொற்று உறுதியானதால், பெங்களூரு பன்னரகட்டா ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதையடுத்து, அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில், குமாரசாமிக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரியவந்தது. இதையடுத்து, நேற்று காலையில் தனியார் மருத்துவமனையில் இருந்து குமாரசாமி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
2 வாரம் ஓய்வு
இதுகுறித்து முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நான் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தேன். தற்போது கொரோனாவில் இருந்து மீண்டதால், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்துள்ளேன். நான் கொரோனா பாதிப்பில் இருந்து மீள்வதற்காக பிரார்த்தனை செய்த ஜனதாதளம் (எஸ்) கட்சியினர், மாநில மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
இன்னும் 2 வாரங்கள் வீட்டு தனிமையில் ஓய்வெடுக்க டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதன் காரணமாக இன்னும் 2 வாரங்கள் மக்கள் யாரையும் சந்திக்க முடியாது. அதுபோல், என்னை சந்திக்க யாரும் வரவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன், என்று கூறியுள்ளார்.
Related Tags :
Next Story