திம்பம் மலைப்பாதையில் மினிலாரி கவிழ்ந்து விபத்து டிரைவர் உயிர் தப்பினார்


திம்பம் மலைப்பாதையில் மினிலாரி கவிழ்ந்து விபத்து  டிரைவர் உயிர் தப்பினார்
x
தினத்தந்தி 25 April 2021 2:11 AM IST (Updated: 25 April 2021 2:11 AM IST)
t-max-icont-min-icon

திம்பம் மலைப்பாதையில் மினிலாரி கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உயிர் தப்பினார்.

தாளவாடியை அடுத்த திம்பம் மலைப்பாதையானது 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டதாக உள்ளது. திண்டுக்கல்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இந்த மலைப்பாதை உள்ளதால் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. தமிழகம்- கர்நாடக மாநிலங்களுக்கு இடையே முக்கிய போக்குவரத்தாக உள்ள இந்த பாதையில் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்பட்டு அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுவது வாடிக்கையான நிகழ்வுகளாக மாறிவிட்டன. 
இந்த நிலையில் கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து கோவைக்கு இரும்பு கம்பி பாரம் ஏற்றி வந்த மினிலாரி நேற்று காலை 8 மணி அளவில் 23-வது கொண்டை ஊசி வளைவு அருகே வரும்போது எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பண்ணாரியில் இருந்து கிரேன் வரவழைக்கப்பட்டு பகல் 11 மணி அளவில் அங்கிருந்து மினிலாரி அப்புறப்படுத்தப்பட்டது. 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் மற்றும் பஸ்சில் வந்த பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர்.

Next Story